Actor Soori Maaman Movie Review (Photo Credit : sooriofficial/i X)

மே 16, கோடம்பாக்கம் (Cinema News Tamil): பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில், நடிகர்கள் சூரி முத்துசாமி, ஐஸ்வர்யா லட்டுமி, ராஜ்கிரண், ஸ்வஸ்திகா, பால சரவணன், யோகி பாபு, பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், விடிவி கணேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் மாமன் (Maaman). இப்படம் 16 ஜனவரி 2025 இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் சூரி அடுத்தடுத்து நாயகனாக நடிக்கும் படம் ஆகும். இந்நிலையில், படத்தில் சூரியின் மாமன் படத்தை பார்த்த சிறுமி ஒருவர் தனது மாமாவின் நினைவு வந்து அழுதுகொண்டு இருந்தார். அவரை சமாதானம் செய்ய பெற்றோர் படாதபாடுபட்டனர். இதுதொடர்பான விடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி தனது உணர்வும் வெளிப்படுத்தி இருக்கிறார். வானிலை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

மாமன் படத்தின் ஸ்பெஷல் ரிவியூ:

நடிகர் சூரியின் ட்விட் பதிவில், "இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ! “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா… இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்!" என தெரிவித்துள்ளார்.

சூரியின் ட்விட் பதிவு: