
ஜூன் 23, சென்னை (Cinema News): சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பார் ஒன்றில் தகராறு நடப்பதாக நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு சம்பவத்தன்று தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நேரில் சென்று அதிகாரிகள் தகராறு செய்த நபர்களை கைது செய்தனர். அப்போது இவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பிரபல தமிழ் நடிகரான ஸ்ரீகாந்தும் (Actor Srikanth) இந்த விவகாரத்தில் சிக்கியது தெரியவந்தது.
அரசியல் கட்சி பிரமுகருக்கும் தொடர்பு?
இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து ஸ்ரீகாந்த் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும், நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Jana Nayagan Glimpse: 'என் நெஞ்சில் குடியிருக்கும்' - இளைய தளபதியின் ஜன நாயகன் கிளிம்பிஸ் வீடியோ.!
ஸ்ரீகாந்தின் போதைப்பொருள் பயன்பாடு உறுதி?
இந்த விவகாரத்தில் கழுகு பட ஹீரோவான கிருஷ்ணாவுக்கும்
(Actor Krishna) தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ் திரையுலகம் மிகப்பெரிய பரபரப்பில் சிக்கி இருக்கிறது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் கடந்த 6 மணிநேரத்திற்கு மேலாக நடைபெறும் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து தற்போது ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து சிக்க இருக்கும் தமிழ் திரையுலக புள்ளிகள்?
இதனால் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் மூலமாக தமிழ்துறையில் பல பெரும்புள்ளிகள் வெளியே வரலாம் என்றும் கூறப்படுகிறது.