ஜூலை 23, சென்னை (Cinema News Tamil): நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு முன்னணி இயக்குனராகவும் தற்போது அடையாளம் பெற்றுள்ளார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்த ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) புதிய படம் ஒன்றை இயக்குவதாக தகவல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. சூர்யாவின் 45 வது திரைப்படத்திற்கு கருப்பு (Karuppu Movie) என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. Riythvika Engagement: பிக்பாஸ் புகழ் ரித்விகாவிற்கு விரைவில் திருமணம்.. நிச்சயதார்த்த கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் டீசர் :
இந்நிலையில் சூர்யாவின் 50வது பிறந்தநாளை ஒட்டி (Actor Surya Birthday) இன்று கருப்பு படக்குழு பிரத்தியேக டீசரையும் வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராகவும், கருப்பசாமி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக தெரிய வருகிறது. அந்த வகையில் கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் திரிஷா, யோகிபாபு, ஷிவாதா உட்பட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பு பணிகளை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார்.
கருப்பு படத்தின் தயாரிப்பு :
ஆர்.ஜே.பாலாஜி படத்தின் இயக்கம் மற்றும் எழுத்துப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜி.கே விஷ்ணுவும், எடிட்டிங் பணிகளை கலைவாணனும் மேற்கொண்டுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாரிக்கப்பட்டு வரும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. கருப்பு படத்தின் டீசர் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.