Kanguva Surya Look: அட்டகாசமான மாஸ் லுக்கில், கங்குவானாக மிரட்டும் சூர்யா: மிரளவைக்கும் வைரல் கிளிக் இதோ.!
Kanguva Wrap (Photo Credit: @Suriya_offl X)

ஜனவரி 11, சென்னை (Cinema News): கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ், வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில் படம் தயாராகி இருக்கிறது.

நடிகர் - நடிகைகள்: இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டே படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

விரைவில் வெளியீடு: ஆனால், சூர்யா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் அடுத்தடுத்து ஜெய்பீம், அண்ணாத்த என படங்களில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போயின. இடையில் கொரோனா வைரஸ் பரவலும் ஒட்டுமொத்த உலகத்தையும் சில ஆண்டுகள் ஸ்தம்பிக்க வைத்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று, வெளியீடுக்கு தயாராகி வருகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளுக்கும் அனிரூத், டி.இமான், ரவி பஸ்ரூர் என பலர் தேர்வு செய்யப்பட்டும், இறுதியில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உறுதி செய்யப்பட்டார். சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, பேங்காங், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்தன. Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 15ம் தேதி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் இதுதான்.. முழு விபரம் இதோ.! 

Surya Sivakumar, Kanguva Movie Stillls (Photo Credit: Twitter)

வெளியீடுக்கு முன்பே சாதனை: கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்திற்கு வெளியீடு செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படம் வெளியீடுக்கு முன்பே ரூ.400 கோடி அளவிலான பணம் வரவை பெற்றுள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தொடர் உரிமைகள், மொழி வாரியான வெளியீடு உரிமையும் இதில் அடங்கும். தமிழ் திரையுலகில் வெளியீடுக்கு முன்பே ரூ.400 கோடி வரை வருமானம் பார்த்த முதல் திரைப்படம் கங்குவா ஆகும்.

சூர்யாவின் பாகம் படப்பிடிப்பு நிறைவு: வரலாற்று பின்னணியுடன், சிஜிஐ வாயிலாக மெருகூட்டப்பட்ட காட்சிகள் என படம் முப்பரிமாண தொழில்நுட்பத்தில், உலகத்தரத்தில் தயாராகி வருகிறது. இதனாலேயே இப்படம் பலதரப்பு ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தில் சூர்யாவின் பாகம் தொடர்பான படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "இதுதான் எனது கங்குவா படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு காட்சி புகைப்படம். படக்குழுவினர் நேர்மறை எண்ணங்களுடன் சிறப்பாக செயல்படுகிறார்கள். எனக்கு இது முடிவாக இருப்பினும், பலருக்கும் தொடக்கமாக இருக்கும். இயக்குனர் சிவாவுக்கு எனது நன்றி. மறக்க முடியாத நினைவுகளை தந்த படக்குழுவுக்கும் நன்றிகள்" என கூறியுள்ளார்.

இந்த பதிவுடன் அவர் வெளியிட்டுள்ள அட்டகாசமான லுக் வைரலாகி வருகிறது.