
மார்ச் 25, கீழடி (Ramanathapuram News): இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டத்தில் உள்ள கீழடியில் (Keezhadi Site), தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை அறிந்துகொள்ளும் வகையில் அகழ்வாய்வில் பல தொல்லியல் சான்றுகள் கிடைத்தன. இதன்பேரில், தமிழக அரசின் பங்களிப்புடன் தமிழ் மொழி மற்றும் பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. தமிழர்களின் தொன்மையை ஒவ்வொருவரும் அறியும் வகையில், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், மாணவ-மாணவியர்கள் என பலரும் கீழடிக்கு நேரடியாக வருகை தந்து, தமிழர்களின் வாழ்வியல் குறித்து அறிந்து வருகின்றனர். Chennai Police Vs SFI Fight: பாலிடெக்னீக் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை? சென்னையில் அதிர்ச்சி.. காவல்துறை - மாணவர் அமைப்பு மோதல்.!
தாய் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்:
அந்த வகையில், தமிழ்த்திரைப்பட நடிகர் 'வைகைப்புயல் வடிவேலு (Vaigaipuyal Vadivelu Keezhadi Visit)' கீழடி அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ் தான் தாய்மொழி. எங்கே சென்றாலும் தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழை எங்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது. நான் முதலில் தமிழ். பின் தான் அனைத்தும். அதற்காக பிற மொழிகளை இழிவாக சொல்லவில்லை. தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். எந்த பள்ளியாக இருந்தாலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் மொழி மூத்த மொழி. தமிழ்நாடு சிறிய நாடு எனினும், மொழி உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழ் மொழிக்கு சிறார்கள் பங்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க தமிழ்! தாய்மொழி வாழ்க! நான் கீழடி வந்து பார்வையிட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்" என பேசினார்.
நடிகர் வடிவேலு இறுதியாக மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.