SFI Protest at Taramani (Photo Credit: @DialogueUpdates X)

மார்ச் 25, தரமணி (Chennai News): சென்னையில் உள்ள தரமணி பகுதியில், தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னீக் கல்லூரி செய்யப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் சிறுமி ஒருவர், சம்பவத்தன்று தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமியை 7 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம், மாணவியை உடனடியாக மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர் என தகவல் தெரியவருகிறது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) போராட்டம் நடத்தினர். இன்று கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டார். அப்போது, காவலர்கள் - மாணவர்கள் அமைப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, இருதரப்பும் தாக்கிக்கொண்டது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட, பதிலுக்கு அதிகாரிகளின் சட்டையை மாணவர்கள் பிடிக்கும் சூழலும் ஏற்பட்டது. Actor Shihan Hussaini Passes Away: பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..! 

காவல்துறை - மாணவர் அமைப்பினர் இடையே மோதல்:

அதாவது, கல்லூரியில் பயின்று வரும் சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமான ராஜேஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். பின் மாணவியின் நகையை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி, தன்னுடன் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மார்ச் 20 அன்று இரவில் விடுதியில் இருந்து வெளியேறிய மாணவி, பின் மறுநாள் வந்துள்ளார். அவருடன் 2 மாணவிகள் சென்றிருந்த நிலையில், அவர்கள் கிண்டி பாலத்துக்கு அடியிலேயே இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச்சென்ற ராஜேஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயக்குமார் என 7 பேர் போதையில் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் குறித்து தகவல் துறையினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, தரமணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி, அவருடன் சென்றவர்கள் என 3 பேருக்கு டிசி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் - காவலர்கள் இடையே மோதல் சம்பவம் நடந்துள்ளது.

மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறை விளக்கம் ஏதும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை.

எஸ்எப்ஐ அமைப்பு போராட்டம்: