பிப்ரவரி 12, ஆழ்வார்பேட்டை (Cinema News): ஜெய்பீம், குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நடிகர் மணிகண்டன் (Actor Manikandan), சமீபத்தில் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகிய குடும்பஸ்தன் (Kudumbasthan) என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக படம் அமைந்தது. பொங்கல் பண்டிகைக்கு பின் வெளியான படம், மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, ரூ.22 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் மட்டும் வசூல் சாதனை படைத்தது. படத்தின் ஓடிடி உரிமையை ஜீ-யும் (Zee Media), தொலைக்காட்சி வெளியீடு உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் கமல் ஹாசன், படக்குழுவை இன்று நேரில் அழைத்து பாராட்டினார். Love Marriage: விக்ரம் பிரபுவின் 'லவ் மேரேஜ்' படத்தின் முதற்பார்வை; லிங்க் உள்ளே.! 

நடிகர் கமல் ஹாசனுடன் குடும்பஸ்தன் படக்குழு சந்தித்துக்கொண்ட காட்சி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)