ஜூலை 25, சென்னை (Chennai News): டிக்டாக்கில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நபர் இலக்கியா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோ வெளியிட்டு 1.6 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள இலக்கியா, பெரும்பாலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளும் நபராகவும் இருந்து வருகிறார். இவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என பல பிரச்சனைகளும் நடந்துள்ள நிலையில் எதையும் கண்டுகொள்ளாமல் தனது செயல்களை தொடர்ந்து வந்தார். கணவரை பிரிந்து கல்லூரி மாணவருடன் உல்லாசம்.. பெண் ஊழியரின் பகீர் செயல்.!
இலக்கியாவின் இன்ஸ்டா ஸ்டோரி :
அரைகுறை துணியுடன் ஆபாச ஆட்டம் என ஒரு காலத்தில் இலக்கியாவை தெரியாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு பேசுபொருளாகவும் அவர் இருந்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னையில் வீடு ஒன்று வாங்கி குடியேறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு இவன் மட்டும் தான் பொறுப்பு" என்று ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் என்பவரின் புகைப்படத்தை சேர்த்து ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்து அதனை பின் டெலிட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி?
இதனால் அவருக்கு என்ன ஆயிற்று? என்பது தெரியாமல் ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இலக்கியா அதிக அளவிலான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலக்கியாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.