Rajinikanth & Vijay (Photo Credit: @FridayCinemaOrg / @Satheesh_2017 X)

பிப்ரவரி 12, போயஸ் கார்டன் (Cinema News): தமிழ் திரையுலகில் இருபெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் & தளபதி விஜய். நடிகர் ரஜினிகாந்த் 80களில் தொடங்கி தற்போது வரை 50 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் தொடர்ந்து நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். நடிகர் விஜய் தனது அயராத உழைப்பு காரணமாக தொடர்ந்து முன்னேற்றங்களை சந்தித்து வருகிறார். இருவருக்கும் தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பிற மாநிலத்திலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் என்பது இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களின் அறிமுகத்திற்கு முன்னர், இருதரப்பு ரசிகர்களும் பட ரிலீஸின் போது கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஒருசில இடங்கள் ரசிகர்கள் மோதலும் நடந்தது. Aghathiyaa Trailer -Tamil: திகிலுடன் மெர்சலை ஏற்படுத்தும் காட்சிகள்.. ஜீவா - அர்ஜுனின் அகத்தியா படம் ட்ரைலர் வெளியீடு.! 

முட்டை வீச வேண்டும் என வாதம்:

ஆனால், சமூக வலைத்தளங்களின் அறிமுகம் டிஜிட்டல் ரீதியான சண்டையை அதிகம் ஊக்குவித்தது. தனக்கு பிடிக்காத நடிகரை பற்றி அவதூறு பேசுவது, ஆபாசமான கருத்துக்களை பகிர்வது என இன்றளவில் டிஜிட்டல் ஊடகங்களில் நடக்கும் சண்டைகள் எல்லை மீறி செல்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் ரஜினி ரசிகர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர், எக்ஸ் செயலியில் பேசிய ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை நடிகர் விஜயின் மீது முட்டை வீச்சு நடத்தப்பட வேண்டும் என பேசப்பட்டது. இதுதொடர்பான விஷயம் செய்தியாக வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

மர்ம நபரின் செயலுக்கு கண்டனம்:

இந்நிலையில், இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்தின் காதுகள் வரை சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் இவ்வாறான விஷம செயலை ஏற்படுத்திய நபரை மறைமுகமாக கண்டிக்குமாறு ரஜினி கூறியுள்ளதாக தெரியவருகிறது. இதன்பேரில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து, ரஜினியின் பெயரை தவறாக உபயோகம் செய்ய வேண்டாம். அவரின் உண்மையான ரசிகர்கள் ஒருபோதும் இவ்வாறான செயலில் ஈடுபட மாட்டார்கள். தமிழ் திரையுலகுக்காக ரஜினி, விஜய் பல சாதனைகளை புரிந்துள்ளனர். உள்நோக்கத்துடன் இவ்வாறான விஷமத்தன பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள். இதுதொடர்பான விஷயத்தை அறவே செய்யாதீர்கள் என கண்டிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினியின் தரப்பில் தற்போது வரை எந்த விதமான அறிவிப்பும், இதுதொடர்பாக வெளியாகவில்லை.