Paramasivan Fathima Trailer (Photo Credit: YouTube)

மார்ச் 14, கோடம்பாக்கம் (Cinema News): லட்சுமி கிரியேஷன்ஸ் (Lakshmi Creations) தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் (Esakki Karvannan) இயக்கத்தில், தீபன் சக்கரவர்த்தி இசையில், எம். சுகுமார் ஒளிப்பதிவில், புவன் எடிட்டிங்கில் எடிட்டிங்கில் உருவாகி இருக்கும் திரைப்படம் பரமசிவன் பாத்திமா (Paramasivan Fathima). மலைக்கிராமத்தில் இருக்கும் இந்து - கிறிஸ்துவ கிராமங்கள் இடையே நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமத்தில் நுழைந்த மதத்தில் மதம்பிடித்தது யாருக்கு? என்ன நடந்தது? என்பதை கூறும் படமாக பரமசிவன் பாத்திமா உருவாகியுள்ளது. Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லீ படம் செய்த சாதனை.. வெளியீடுக்கு முன்பே அசத்தல் அறிவிப்பு.! 

Paramasivan Fathima (Photo Credit: @Rameshlaus X)
Paramasivan Fathima (Photo Credit: @Rameshlaus X)

விரைவில் திரைக்கு வருகிறது:

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் விமல், சாயா தேவி, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் உட்பட பலருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் இன்று அரசியலில் முக்கிய புள்ளிகளாக வலம்வரும் பாஜக அண்ணாமலை, நாதக சீமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரைலர் இரண்டு மதத்தை சேர்ந்த கிராமத்துக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய காட்சிகளை கொண்டுள்ளது. படத்தின் வெளியீடு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரமசிவன் பாத்திமா ட்ரைலர் (Paramasivan Fathima Official Trailer):