Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.!

ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

Madhampatty Rangaraj:
Madhampatty Rangaraj & Joy Crizildaa Marriage (Photo Credit : @joy_stylist)

ஆகஸ்ட் 29, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழ் திரையுலகில் நிகழும் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படத்தை கடந்த மாதம் ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா திருமணம் :

மேலும் தங்களது திருமண கோலத்தில் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், '6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.. பேபி லோடிங் 2025..' எனவும் பதிவிட்டு இருந்தார். முன்னதாகவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வேறு பெண்ணுடன் அவர் காதல் உறவில் இருந்தது சர்ச்சையை சந்தித்தது. இதனிடையே கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் பங்கேற்று இருந்தார். இதனை அடுத்து ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என்று அறிவித்து பதிவிட்டிருந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. Lakshmi Menon Case: ஆபாசமாக திட்டி, பாலியல் துன்புறுத்தல்.. ஐடி ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் பகீர் குற்றச்சாட்டு.! 

தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் :

இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். இது குறித்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "சென்னையில் உள்ள கோவிலில் வைத்து மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்தார். சமீபத்தில் அவர் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியதால், அது குறித்து கேட்க தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது அவர் என்னை தாக்கினார். கோவிலில் வைத்து திருமணம் செய்து தற்போது என்னுடன் வாழ மறுக்கிறார். நான் 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ மன்றாடுகிறேன். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்" என தெரிவித்துள்ளார்.

6 மாத கர்ப்பம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஜாய் கிரிசில்டா :

(The above story first appeared on LatestLY on Aug 29, 2025 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).