Vishal | Sundar C | Madha Gaja Raja (Photo Credit: @iammoviebuff007 X).

ஜனவரி 12, சென்னை (Cinema News): சுந்தர் சி இயக்கத்தில், மறைந்த நடிகர்கள் மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி, நலமுடன் நடிகர்கள் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட், ஜான் கொக்கன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்து உருவான திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). கடந்த 2014ம் ஆண்டு வெளியாகவேண்டிய திரைப்படம், பல்வேறு காரணங்களால் தள்ளிச்சென்று 12 ஜனவரி 2025 இன்று பொங்கல் 2025 பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டு இருக்கிறார். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அருண்; இன்று வெளியேற்றம் யார்?.. 

உடல்நலம் தெரிவித்தேன்:

படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கைகள் நடுக்கத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஷாலுக்கு, காய்ச்சல் அதிகம் இருந்தபோதிலும், அவர் உடல்நலனை கருத்தில் கொள்ளாமல், இயக்குனரின் மீதான அன்பால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று படத்தின் பிரிவியு ஷோ நடைபெற்றது. அப்போது, நல்ல உடல்நலம் தேறிய விஷால், அனைவரிடமும் தனது உடல்நலன் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், தனக்கு அதிக காய்ச்சல் இருந்ததாகவும், தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தித்த நபர்களுக்கு நன்றி எனவும் கூறினார்.

படம் எப்படி (Madha Gaja Raja Review)?

இன்று மத கஜ ராஜா (Madha Gaja Raja Tamil Movie) திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தை பார்த்த பலரும் நல்ல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 2014ம் ஆண்டுகளில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று இருந்த சுந்தர் சி, விஷால், சந்தானம், விஜய் ஆண்டனி கூட்டணி தனது தனித்துவ பாணியில் வெற்றி அடைந்துள்ளது. கடந்த காலங்களில் வெளியான படங்களை காட்டிலும், சிரிப்பலைகளை மீண்டும் திரையரங்கில் உறுதி செய்துள்ளதாக கூறுகின்றனர். மனோபாலாவின் காமெடி, சந்தானத்தின் கூட்டணி நல்ல மனநிம்மதி, சிரிப்பை தந்து, அன்றைய நாட்களை நினைவுபடுத்துவதாக விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த விஷால்:

நடிகர் விஷால் உடல்நலம் தேறினார்:

பூரணமாக உடல்நலம் தேறிய விஷால்: