Actress Nivetha Pethuraj Officially Introduces Her Fiancé Rajhith Ibran (Photo Credit : Instagram)

ஆகஸ்ட் 28, சென்னை (Cinema News): மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ்(Nivetha Pethuraj). 11 வயதில் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று பின் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு பயின்று மீண்டும் தாயகம் வந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற தமிழ் படத்தில் நடித்து நடிகையாக நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். Actress Lakshmi Menon: கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. தேடுதல் வேட்டையில் போலீசார்.! 

காதலனை கரம்பிடிக்கும் நிவேதா பெத்துராஜ் :

இது தவிர்த்து தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருகிறார். நடிப்பு தவிர்த்து பார்முலா ஒன் கார் பந்தயம், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். தமிழக இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகையாக வலம் வந்த நிவேதா பெத்துராஜ், தற்போது தனது காதலரான தொழிலதிபர் ரஜீத் இப்ரான் (Rajhith Ibran) என்பவரை கரம் பிடிக்க உள்ளார். இருவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் தொடர்பான தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விரைவில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நீண்ட நாள் காதலனான ரஜீத் இப்ரானுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜீத் இப்ரான் தொழிலதிபர் மற்றும் மாடலிங் துறையைச் சார்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் விரைவில் திருமணம் (Nivetha Pethuraj Marriage) நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காதலனை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ் :

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)