Good Bad Ugly Teaser Making Video (Photo Credit: YouTube)

மார்ச் 15, சென்னை (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில்,ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி வழங்கிய ஆதிக், தனது பாணியில் தல ரசிகராக நடிகர் அஜித் குமாரை இயக்கி படத்தை வழங்கி இருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 10 ஏப்ரல் 2025 அன்று படம் திரையரங்கில் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Paramasivan Fathima: மலைக்கிராமத்தில் நுழைந்த 'மதம்'.. நடந்தது என்ன? விமலின் நடிப்பில் பரமசிவன் பாத்திமா.. அசத்தல் ட்ரைலர் காட்சிகள் இதோ.! 

10 ஏப்ரல் 2025 படம் வெளியீடு:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என உலகளவில் வெளியாகும் திரைப்படம், அமெரிக்காவில் இந்திய நாட்காட்டிபடி 09 ஏப்ரல் 2025 அன்று நள்ளிரவில் வெளியாகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் முதல் காட்சி அரசின் அனுமதியுடன் காலை 9 மணிக்கு அல்லது 10 மணிக்கு மேல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்ட காரணத்தால், இறுதிக்கட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லீ டீசர் மேக்கிங் வீடியோ (Good Bad Ugly Teaser Making):