ஜூன் 20, மும்பை (Cinema News): இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், கிருதி சானொன், தேவ்டட்டா நாகே, சைப் அலி கான், சன்னி சிங் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ஆதிபுருஷ் (Adipurush).
இந்த படம் கடந்த ஜூன் 16ம் தேதி உலகளவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியானது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.241 கோடி வசூல் செய்துள்ளது. Tamannaah Bhatia Sex Scene: நடிகை தமன்னாவின் ஆபாச படங்கள் இணையத்தில் வைரல்; படக்காட்சிகளை கத்தரித்து சித்து வேலை காட்டிய விஷமிகள்.!
இராமாயணத்தை மையமாக கொண்டு ஆதிபுருஷ் திரைப்படம் எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது. படம் முப்பரிமாண முறையில் எடுக்கப்பட்டது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் முதலீடு செய்ததை எடுக்குமா? என்ற அளவில் படம் பின்னாட்களில் தொய்வை சந்தித்துள்ளது.
இதே முப்பரிமாண முறையில் எடுக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படத்தில் நல்ல கதையம்சம் என்பது இருந்தும் அது தோல்வியை சந்தித்த நிலையில், அதே நிலையை ஆதிபுருஷ் திரைப்படமும் பெற்றுள்ளது
அதேபோல, படத்தின் வெளியீடுக்கு முன்பு படக்குழு திரையரங்கில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை இடம்விட வேண்டும் என பேட்டி அளித்து இருந்தது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இப்படம் உண்மையான இராமாயண கதை இல்லை, இயக்குனர் ஓம் ராவத் மற்றும் எழுத்தாளர் மனோஜ் மண்டஷிர் ஆகியோர் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள இந்தியர்களையும் வார்த்தைகளால் மனதை வசைபாடி இருக்கின்றன.
இதனால் அகில இந்திய சினிமா பணியாளர்கள் சங்கம் ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், ஓ.டி.டி தளத்திலும் பதிவு செய்ய கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.