டிசம்பர் 04, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ்; டிசம்பர் 12 அன்று கொண்டாட்டம்..!
ஒரேநாளில் ரூ.294 கோடி வசூல்:
இதனையடுத்து, படத்தின் புஷ்பா இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியானது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது. உலகளவில் படத்தின் வெளியீடுக்கு முன்னதாகவே, ப்ரீபிக்கிங் முறையில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது இருந்தது. முதல் நாள் மட்டும் படம் ரூ.294 கோடி வசூலை செய்து மிகப்பெரிய சாதனையை அடைந்தது.
சாமி ஆடிய ரசிகர்கள்:
இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற கங்காம்மா, காளி ஆகிய தெய்வங்களின் காட்சிகள், அதன் பின்னணி இசை பலரையும் திரையரங்கில் பிரசவத்தில் ஆழ்த்தியது. ஒருசிலர் உணர்ச்சி மிகுந்து சாமி ஆடிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இரண்டாவது நாளிலும் சேர்ந்து படம் ரூ.400 கோடி வசூலை கடந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்றும்-நாளையும் சனி & ஞாயிறு என்பதால், படத்தின் வசூல் பலநூறு கோடிகளை எட்டும் எனவும் கவனிக்கப்படுகிறது.
புஷ்பா 2 படத்தில் வரும் காட்சிகளுக்கு சாமி ஆடும் ரசிகர்கள்:
Neekanna Peddha Dhikku... Lokaana Yekkadundhi
Naivedhyam Ettanga... Maa Kaada Yemitundhi
Moralanni Aaalakinchi... Varameeyyave Thalli 🙏🙏🙏
GANGO RENUKA THALLI 🙏🙏🙏 https://t.co/shS1a4rYvH
— Mythri Movie Makers (@MythriOfficial) December 7, 2024