Nandini Kashyap was arrested for a car accident in Guwahati (Photo Credit : @guwahatinews_ / @venom1sstatus X)

ஜூலை 31, அசாம் (Assam News): அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப். இவர் சமீபத்தில் வெளியான ருத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை விபத்து வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கவுஹாத்தியில் 120 கிலோமீட்டர் வேகத்தில் தனது காரை ஓட்டி சென்ற நடிகை 21 வயது மாணவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். பாலிடெக்னிக் மாணவரான சாமியுல் ஹக் என்பவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவர் மாணவருக்கு உதவாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய நடிகை :

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் இரண்டு கால்களும் முறிந்த நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை மறைப்பதற்கு நடிகை முயற்சிக்கவே, அவரை சுற்றி வளைத்த பொதுமக்கள் கடுமையான வாக்குவாதம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அவர்களை தாக்க முற்பட்ட நடிகை, மாணவரின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். Kaantha Teaser: துல்கர் சல்மானின் காந்தா பட டீசர் வெளியானது.. மிரட்டும் சமுத்திரக்கனி.!

மாணவர் சிகிச்சை பலனின்றி மரணம் :

இதனிடையே விபத்தில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடிகை நந்தினி விபத்து ஏற்படுத்தியது உறுதி செய்யப்படவே, அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.