Actor Dulquer Salmaan's Kaantha Movie Teaser (Photo Credit : Youtube)

ஜூலை 28, கோழிக்கோடு (Cinema News): மோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக காந்தா என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் :

இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் திரையுலகின் முதல் உச்சநட்சத்திரம் என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இப்படம் தயாராகியுள்ளது. இப்படம் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து காந்தா படத்தை தயாரித்துள்ள நிலையில், படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. Madhampatty Rangaraj: நேற்று கல்யாணம்.. இன்று கர்ப்பம்.. மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!

நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு :

இந்நிலையில் படக்குழு சார்பில் காந்தா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் படக்குழு காந்தா படத்தின் டீசர் மற்றும் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாகவே துல்கர் சல்மானின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டு வரும் நிலையில், இந்த படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா பட டீசர் வீடியோ உங்களுக்காக :