Ram Charan & Siranjeevi (Photo Credit: @ANI X)

ஜனவரி 22, அயோத்தி (Ayodhya): ரூபாய் 1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் (Ram Mandir) இன்று கும்பாவிஷேக பணிகளைதொடர்ந்து மக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில், பாலராமரின் கோவில் கும்பாபிஷேக பணிகள் இன்று நடைபெறுவதால், அங்கு ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் ராம பக்தர்களும் குவிந்துள்ளனர்.

ராம் சரண் அயோத்தி பயணம்: கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாவிஷேக விழாவில் நேரில் கலந்துகொள்ள பலருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வந்த ராம்சரண், சிரஞ்சீவி ஆகியோரும் அயோத்தி சென்றனர். இதற்கு முன்னதாக ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் (Actor Ram Charan), "மிக நீண்ட காத்திருப்பு இது. ராமர் கோவில் கும்பாவிஷேக நாளில் நாங்கள் அனைவரும் அங்கு இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம்" என தெரிவித்தார். KS Bharat Dedicated Century to Lord Ram: சதத்தை பகவான் ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணித்த கிரிக்கெட் வீரர்; மைதானத்தில் நெகிழ்ச்சி செயல்.! 

முன்னாள் அமைச்சர் & நடிகர் சிரஞ்சீவி கருத்து: அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சிரஞ்சீவி (Chiranjeevi), "இந்த வாய்ப்பு மிகவும் சிறப்பானது. இதனை அரிய வாய்ப்பாகவே நாங்கள் நினைக்கிறோம். எனது நம்பிக்கை தெய்வம் ஹனுமான், என்னை நேரில் அழைத்ததாக நாங்கள் உணர்கிறோம். கும்பாவிஷேகத்தை நேரில் பார்க்க வாய்ப்புக்கிடைத்த நாங்கள் அதிஷ்டசாலிகள்" என கூறினார்.