டிசம்பர், 8: தமிழ் திரையுலகில் (Tamil Movies) ஆண்டுக்கு சராசரியாக 300 க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில், வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றால் புதிய படங்களின் அணிவகுப்பு என்பது திரையரங்கில் கட்டாயம் இருக்கும். இவை சென்னையை தவிர்த்து உள்ள பிற நகரங்களுக்கு பெரும்பாலும் விநியோகம் ஆகுவது இல்லை.

அவற்றுக்கான விளம்பரம், வரவேற்பு, படத்தின் நாயகர்கள் என பல அம்சத்தால் படங்கள் வெற்றி/தோல்வியை சந்திக்கின்றன. ஒரு படத்தின் வெற்றி என்பது அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரையும் சார்ந்து அமைகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க அப்படத்தின் பாடல்கள் (Tamil Songs) பெரும் தூண்டுகோலாக அமைகிறது.

2021ல் நம்மை மகிழ்விக்க பல பாடல்கள் வெளியானது. அதனைப்போல, 2022-ல் கிட்டத்தட்ட ஆண்டின் இறுதிக்கட்ட மாதங்களை நாம் நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். இந்த வேளையில் 2021 & 2022ல் ரிலீஸ் ஆகிய படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் குறித்த சிறுதொகுப்பை இங்கு காணலாம்.

பத்தல பத்தல: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உட்பட பலரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விக்ரம். இப்படத்தில் இருக்கும் பத்தல பத்தல பாடல், Once upon a Time போன்றவை ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. https://youtu.be/9VpeTiz81gc Daily Exercise: சூரியன் உதிப்பதற்கு முன் கட்டாயம் நீங்கள் செய்யவேண்டியது என்ன?.. பைசா செலவில்லாமல் உடலுக்கு கிடைக்கும் அசத்தல் நன்மைகள்.! 

காலத்திற்கும் நீ வேண்டும்: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காலத்திற்கும் நீ வேண்டும் என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. https://youtu.be/VprGcgD4wlM

நாங்க வேற மாறி: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகிய வலிமை திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் உள்ள நாங்க வேற மாறி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. https://youtu.be/o22d6IcEAFE

நட்பு & நாட்டுக்கூத்து: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் இடம்பெற்ற நட்பு பாடல் மற்றும் நாட்டுக்கூத்து ரசிகர்களிடம் நீங்காத வரவேற்பு இடத்தினை பெற்றது. https://youtu.be/-LEY8JS6Fjw

பொன்னி நதி பார்க்கணுமே: மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் & நடிகைகள் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பார்த்தீபன், சரத் குமார் உட்பட பலரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். சோழப்பேரரசை மையப்படுத்தி எழுதப்பட்ட கல்கியின் நாவலை தழுவி வெளியான பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற பொன்னிநதி பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. https://youtu.be/Oh5sU8YzF1A

மேகம் கருக்காதா? பெண்ணே பெண்ணே: தனுஷின் அட்டகாசமான நடிப்பில், நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா? பாடல் பல காதல் ஜோடியிடையே இன்று வரை வரவேற்பை பெற்று சிறந்த பாடல் என்ற இடத்தினை பெறுகிறது. https://youtu.be/cEWwJxEq9Lg Karivepillai Powder: ஒரேமுறை தயார் செய்து குழம்பு பிரச்சனையை தவிர்க்க, பேச்சுலர் ஸ்பெசல் கருவேப்பில்லை பொடி தயார் செய்வது எப்படி?..! 

பிரைவேட் பார்ட்டி: நடிகர் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, சூர்யா, சூரி உட்பட பலரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் டான். இப்படத்தில் இடம்பெற்ற பிரைவேட் பார்ட்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. https://youtu.be/paDG3S3UmQM

மெகபூபா: யாஷ் நடிப்பில் கன்னட மொழியில் வெளியாகிய தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் 2-ம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இருந்த அம்மா பாடல், மெகபூபா என்ற காதல் பாடல் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. https://youtu.be/qoZncUT-B9Y

டிப்பம் டப்பம்: நடிகை நயன்தாரா, சமந்தா, நடிகர் விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான காத்து வாக்குள இரண்டு காதல் திரைப்படத்தின் டிப்பம் டப்பம் பாடல் இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் கேட்கப்பட்டு வருகிறது. https://youtu.be/tFX2UvkQj44

மயக்குறியே: 2022ல் பல பாடல்கள் நம்மிடையே வரவேற்பு பெற்றிருக்கும். அதனை மீண்டும் மீண்டும் என பலமுறை வைத்து கேட்டிருப்போம். ஆனால், இப்பாடல் மனதினுள் ஊடுருவி செய்யும் சேட்டை ஈடில்லாதது. அப்பாடலின் வீடியோ இணைப்பும் உங்களுக்காக. https://youtu.be/Et3GVVAamuA

2022ல் உங்களை கவர்ந்த பாடல் ஏதேனும் இருந்தால் சொல்லிவிட்டு போங்கள்..

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 10:43 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).