அக்டோபர் 23, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டி, 103 நாட்கள் நடைபெறும்.
போட்டியின் இறுதி வரையில், மக்கள் ஆதரவுடன் வீட்டிற்குள் இருக்கும் இருவரில் இருந்து ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். அவரை கமல் ஹாசன் பிக் பாஸ் இல்லத்தின் சீசன் வெற்றியாளராக மக்கள் முன்னிலையில் அறிவிப்பார்.
7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், விஷ்ணு தேவி, அக்சயா உதயகுமார், ஜோதிகா விஜயகுமார், ஐஷு, மாய கிருஷ்ணன், விஷ்ணு விஜய், சரவணன் விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பாவா செல்லத்துரை, அனன்யா, விஜய் வர்மா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். Python Snapped Oldman Neck: கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு; முதியவரின் உயிரை காப்பாற்றிய சாதுர்ய செயல்..!
இவர்களில் பாவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிக்கொண்ட நிலையில், விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் போட்டியில் இருந்து மக்கள் ஆதரவின்மையால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாசில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும் விஷயம் Wild Card Entry தான்.
22 நாட்கள் போட்டியை வெளியே இருந்து பார்த்தவர்களில், விஜய் டிவி நிர்வாகத்தால் இறுதியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு 20 - 30 நாட்களை கடந்ததும் Wild Card Entry எனப்படும் புதிய வருகை உறுதி செய்யப்படும். வழக்கமாக ஒருவரை இவ்வாறு அனுப்புவார்கள்.
ஆனால், நடப்பு பிக் பாஸ் தொடரில் 2 வீடு என பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், Wild Card Entry விவகாரத்தில் 5 பேர் புதிதாக இல்லத்திற்குள் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் அக்.29ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் Wild Card Entry நடக்கிறது. இதனை விஜய் டிவி நிர்வாகம் ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.