ஜனவரி 18, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 104 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் நாளை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், வெற்றியை நோக்கிய பயணத்தில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். Jayam Ravi & Aarti Divorce: நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு; கெஞ்சும் ஆர்த்தி, விடாப்பிடியாக ரவி.. நீதிமன்றம் கொடுத்த அப்டேட்.!
வெளியேறிய போட்டியாளர்கள் லிஸ்ட்:
ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேறி இருக்கின்றனர். ஜாக்குலின் மிட் வீக் எவிக்சனில், பணப்பெட்டி டாஸ்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இறுதிப்பட்டியலில் இருப்பவர்கள்:
இறுதிக்கட்டமாக ஆட்டத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். முதலில் சண்டை, சச்சரவு என கடும் விமர்சனத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்கொண்டாலும், இறுதியில் அனைத்தும் சுவாரசியமாக முடித்துக்கொள்ளப்பட்டது. கடும் ஆத்திரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ், மீண்டும் தனது வீட்டிற்கு வந்தபோது அமைதியாக இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் க்ராண்ட் பின்னாலே (Bigg Boss Tamil Season 8 Grand Finale) நாளை 18 ஜனவரி 2025 அன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்திற்கு தயாராகி உள்ளனர். முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இறுதிப்பட்டியலில் இருக்கின்றனர்.
கிராண்ட் பினாலேவுக்கு தயாரான பிக் பாஸ் தமிழ் சீசன் 8:
வெற்றி மகுடத்தை சூடப்போவது யார்? 🏆😎 #BiggBossTamil Season 8 #GrandFinale - நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #VijayTelevision #VijayTV pic.twitter.com/4WyYfeKsb5
— Vijay Television (@vijaytelevision) January 18, 2025