Vijay Sethupathi | Muthukumaran Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

ஜனவரி 19, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 105 நாளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்று (Bigg Boss Tamil Season 8 Grand Finale) இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், வெற்றியை நோக்கிய பயணத்தில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். Rahul Tiky Wife: யூடியூபர் ராகுல் டிக்கி மரணம்; மனைவி கர்ப்பம்? பரபரப்பு தகவல்.. மாமியாரின் அதிர்ச்சி செயல்.! 

வெளியேறிய போட்டியாளர்கள் லிஸ்ட்:

ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேறி இருக்கின்றனர். ஜாக்குலின் மிட் வீக் எவிக்சனில், பணப்பெட்டி டாஸ்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 106 வது நாளாகிய இன்று பிக் பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர் முத்துக்குமரன்?

நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், முத்துக்குமரன் வெற்றியடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், விஜே விஷால் அடுத்த வெற்றியாளராக இருப்பார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று இரவு வெற்றியாளர் உறுதி செய்யப்படுவார். சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே முத்துக்குமரன் தான் பிக் பாஸின் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டு, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இறுதி அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

பிக் பாஸ் இறுதிக்கட்டம் தொடர்பான ப்ரோமோ: