Bigg Boss Tamil Season 8 | Grand Finale (Photo Credit: @gurunaatha1 X)

ஜனவரி 19, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பு செய்யப்பட்ட ரியாலட்டி ஷோவானா பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8), இன்று (19 ஜனவரி 2025) இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டு, எலிமினேசனில் வெளியேற்றப்பட்டனர். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் Grand Finale இன்று.. வெற்றியாளர் யார்? எகுறும் எதிர்பார்ப்புகள்.! 

முத்துக்குமரன் வெற்றி அடைந்தார்:

இறுதி 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருந்தனர். இவைகளில் ராயன், வர்ஷினி ஆகியோர் இறுதிக்கட்டத்தில் வெளியேறிய நிலையில், விஜே விஷால், சௌந்தர்யா, முத்துக்குமரன் (Muthukumaran Bigg Boss Tamil) ஆகியோர் எஞ்சி இருந்தனர். போட்டியில் தொடக்கத்தில் இருந்து சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த முத்துக்குமரன், இறுதியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ. இலட்சம் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் போட்டியாளர் முத்துகுமாரனை மனம் நெகிழ்ந்து பாராட்டி இருந்தார். Vidaamuyarchi Pathikichu Lyric Song: விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற பத்திக்கிச்சு பாடல் வெளியீடு; வீடியோ லிங்க் உள்ளே.!

Bigg Boss Season 8 Tamil (Photo Credit: @MSimath X)
Bigg Boss Season 8 Tamil (Photo Credit: @MSimath X)

பிற போட்டியாளர்களுக்கு விருது:

போட்டியாளர்களின் டாஸ்க் பீஸ்ட் விருது ரயானுக்கும், சூப்பர் ஸ்டார்ங் ஜாக்குலினுக்கும், அட்டென்ஷன் சீக்கர் ராணவுக்கும், ஸ்டெட்டர்ஜிஸ்ட் விருது ஆனந்தி, சிறந்த கேப்டன் விருது தீபக்கிற்கும், கேம் சேஞ்சர் விருது மஞ்சரிக்கும் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற முத்துகுமாரனுக்கு ரூ.40 இலட்சத்து 50 ஆயிரம் பணம் பரிசு தொகையாக முத்துகுமரனுக்கு வழங்கப்பட்டது. ரூ.50 இலட்சத்தில் இருந்த தொகை டாஸ்கின் போது வெவ்வேறு தொகையாக கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் இருந்து எஞ்சிய தொகை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. முத்துக்குமரன் வெற்றி அடைந்தது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TV Actor Dies: 23 வயதில் சோகம்... இளம் சீரியல் நடிகர் சாலை விபத்தில் சிக்கி மரணம்... ரசிகர்கள் சோகம்.! 

இறுதி திக் திக் நிமிடங்கள்:

இறுதிக்கட்டத்தில் விஜே விஷால், சௌந்தர்யா, முத்துக்குமரன் (Tittle Winner Muthukumaran) ஆகியோர் எஞ்சி இருந்த நிலையில், அவர்களில் விஜே விஷால் (VJ Vishal Bigg Boss Tamil) எலிமினேஷன் முறையில் வெளியேறினார். 105 நாட்கள் வீட்டிற்குள் இருந்தவர், மக்களின் வாக்குகளை குறைந்தளவு பெற்றுக்கொண்டு எவிக்சன் முறையில் வெளியேறினார். இறுதியில் இருந்த சௌந்தர்யா மற்றும் முத்துகுமரனில், குமரன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியிலும், விஜய் சேதுபதியை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமரன் பரிந்துரைத்த புத்தகங்கள்:

குடும்பத்தினருடன் பேசிய போட்டியாளர்கள்:

முத்துகுமரனுக்கு பரிசளித்த விஜய் சேதுபதி:

 

பிக் பாஸ் போட்டியில் இறுதி 3 போட்டியாளர்களும், இந்த சீசனுக்கான இறுதி நிறைவும்:

 

போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளின் விபரம்:

பிக் பாஸ் ரசிகர்களின் நெகிழ்ச்சி பதிவு:

 

மாறா நீ ஜெயிச்சிட்டடா: