Bigg Boss Aadhirai Eviction Exit Speech (Photo Credit : Instagram)

அக்டோபர் 26, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 20 நாட்கள் கடந்துள்ளன. வீட்டில் இருந்து பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேறினர். நந்தினி (Nandhini Bigg Boss Tamil 9) தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மனஉளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். எந்த சீசனாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, காதல், கிசுகிசு தொடர்பான பஞ்சாயத்துகள் இருக்கும். ஆனால், நடப்பு சீசனில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக பல பகீர் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கின்றன. Bigg Boss Tamil 9 Elimination: பிக் பாஸில் எல்லை மீறிய செயல்கள்.. 3வது வாரத்தில் வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லை மீறும் போட்டியாளர்கள்:

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர்களில் ஆதிரை & எப்ஜெ, அரோரா & துஷார், விஜே பார்வதி & கம்ருதீன் ஆகியோரின் செயல்பாடுகள் ஒருசமயத்தில் அண்ணன்-தங்கை உறவு, நட்பு என வெளியே கூறினாலும், பிற நேரங்களில் எல்லை மீறி செல்வது போல காட்சிகள் வெளியாகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையால் துஷாரின் வீட்டு தலைவர் பொறுப்பும் நேரடியாக பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருந்தது. இவ்வகை குற்றசாட்டுகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இதன் பின் நடந்த வீட்டுத்தல போட்டியில் கனி வெற்றி பெற்று தலைமை பொறுப்பை கையில் எடுத்தார். ஆனால் கனி ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவர்களது கூட்டத்திற்கு மட்டும் உதவுவதாகவும் பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூன்றாவது வார சனி, ஞாயிறு கிழமைகளில் விஜே பார்வதி மற்றும் கம்ருதீனை விஜய் சேதுபதி ரோஸ்ட் செய்து பேசி இருந்தார். மேலும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களை தவறாக பேசினாரா ஆதிரை?

அப்போது திவாகரின் செயல்களால் பெண்களுக்கு சேஃப்டி இருக்கா? இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அனைத்து பெண்களும் நாங்கள் சேஃப்டியாக தான் இருக்கிறோம். அவரால் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எலிமினேஷன் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் இருந்த ஆதிரை வெளியேற்றப்பட்டார். இதனிடையே ஆதிரை வெளியேறும் போது பார்வையாளர்களை விமர்சித்ததாக சில தகவல்கள் இணையத்தில் பரவின. அதில், "இந்த பிக் பாஸ் ஷோவை பார்த்துவிட்டு ஓட்டு போட தெரியாத தற்குறி(படிப்பறிவு இல்லாதவர்கள்) மக்களால் தான் நான் இங்கு நிற்கிறேன்" என அவர் கூறியதாக தகவல் இணையத்தில் வெளியாகியது. இந்த நிலையில் ஆதிரை உண்மையில் அப்படி கூறவில்லை என உணர்த்தும் விதமாக அவர் வெளியேறும்போது பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

இணையத்தில் வலம் வரும் தகவல்:

ஆதிரை பேசியது என்ன?

அந்த வீடியோவில் ஆதிரை கூறியதாவது, "நான் அனைத்து கேம்களிலும் நன்றாக தான் விளையாடுவேன். எனக்கு டாஸ்க், கேமில் நிறைய இன்ட்ரஸ்ட். நான் உள்ளே இருந்திருந்தால் இன்னும் நிறைய விளையாடியிருப்பேன். எங்கே மிஸ் ஆனது என தெரியவில்லை. நான் உள்ளே இருப்பதற்கு தகுதியானவள். தகுதி இல்லாத சிலர் உள்ளே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள். நான் இப்போது வெளியே இருக்கிறேன் என்றால் மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் சொல்வேன். மக்கள் புரிந்து கொள்ளாமல் ஓட்டு போட்டு என்னை வெளியே அனுப்பி விட்டனர்" என தெரிவித்து இருந்தாரே தவிர, ஓட்டு போடத் தெரியாத தற்குறி மக்களால் நான் இங்கு நிற்கிறேன் என கூறவில்லை. இது குறித்த வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பலரும் ஆதிரை Wild Card ரவுண்டில் பங்கேற்பதை தடுப்பதற்காகவே சில பிஆர் கும்பல் இப்படி வேலை பார்த்து வருகின்றன. அவர் கூறாத வார்த்தைகளையும் கூறியதாக பரப்பி ஆதிரை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது ஆதிரை பேசிய வீடியோ:

PR கும்பலால் பாதிக்கப்படும் மக்கள் ஓட்டுகள்:

உண்மையில் PR கும்பலால் போன முறை பிக் பாஸ் சீசனிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. தற்போதும் ஆதிரை, கம்ருதீன், பார்வதி போன்றோர் PR கும்பல் வைத்துக்கொண்டு மக்களை திசைதிருப்ப பல முயற்சிகளை எடுத்துள்ளதால் மக்களின் உண்மையான ஓட்டுகள் பாதிக்கப்படுகின்றன. விஜய் டிவி இதனை கருத்தில் கொண்டு PR டீம் இல்லாமல் மக்களை மட்டும் வைத்து அவர்களது ஓட்டு மற்றும் விமர்சனங்களை முன்வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .