அக்டோபர் 26, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 20 நாட்கள் கடந்துள்ளன. வீட்டில் இருந்து பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேறினர். நந்தினி (Nandhini Bigg Boss Tamil 9) தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மனஉளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். எந்த சீசனாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, காதல், கிசுகிசு தொடர்பான பஞ்சாயத்துகள் இருக்கும். ஆனால், நடப்பு சீசனில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக பல பகீர் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கின்றன. Bigg Boss Tamil 9: கேமிராவை மறந்து கொஞ்சல், சிணுங்கல்.. குறும்படம் போட்டு பிக் பாஸ் கழுவி ஊத்திய தருணம்..!
பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லை மீறும் போட்டியாளர்கள்:
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர்களில் ஆதிரை & எப்ஜெ, அரோரா & துஷார், விஜே பார்வதி & கம்ருதீன் ஆகியோரின் செயல்பாடுகள் ஒருசமயத்தில் அண்ணன்-தங்கை உறவு, நட்பு என வெளியே கூறினாலும், பிற நேரங்களில் எல்லை மீறி செல்வது போல காட்சிகள் வெளியாகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையால் துஷாரின் வீட்டு தலைவர் பொறுப்பும் நேரடியாக பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருந்தது. இவ்வகை குற்றசாட்டுகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இதன் பின் நடந்த வீட்டுத்தல போட்டியில் கனி வெற்றி பெற்று தலைமை பொறுப்பை கையில் எடுத்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூன்றாவது வாரத்தில் வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில், எலிமினேஷன் வோட்டிங் லிஸ்டில் கடைசி மூன்று இடத்தில் இருக்கும் ஆதிரை, அரோரா, துஷார், ரம்யா, கலையரசன் ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 3வது வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர் யார் (Bigg Boss 3rd Week Eviction)?
பிக் பாஸின் சனிக்கிழமை ப்ரோமோவை பொறுத்தவரையில் விஜே பார்வதி மற்றும் கம்ருதினை ரோஸ்ட் செய்து விஜய் சேதுபதி பேசியிருப்பார். இதனை தொடர்ந்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் செயல்கள் குறித்தும் பேசப்பட்டது. அப்போது திவாகரின் செயல்களால் பெண்களுக்கு சேஃப்டி இருக்கா? இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அனைத்து பெண்களும் நாங்கள் சேஃப்டியாக தான் இருக்கிறோம். அவரால் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர். ஆனால் பார்வையாளர்கள் மத்தியில் திவாகர் செய்யும் சில விஷயங்கள் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உறுதி செய்துள்ளதாக தெரிவித்து அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து எல்லை மீறிய பேச்சுக்களால் விமர்சனத்தை சந்தித்துள்ள அரோரா, ஆதிரை இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்? என்று அனைவரும் காத்திருந்த நிலையில், ஆதிரை (Bigg Boss Tamil Aadhirai) வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பிக் பாஸ் வாட்டர்மெலன் ஸ்டாரால் பெண்களுக்கு Safety இல்லையா?
#Day21 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/adNYu9qjLy
— Vijay Television (@vijaytelevision) October 26, 2025