Bigg Boss Tamil Season 9 Week 2 Elimination (Photo Credit : Instagram)

அக்டோபர் 19, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) முந்தைய சீசன்களை போல அல்லாமல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பலரும் குறிவைத்து, தற்போது அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாகிவிட்டது. இதனால் முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டார். எலிமினேஷன் லிஸ்டில் இல்லாத நந்தினியும் தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். காதல் கன்டென்ட் கொடுக்கலாம் என நினைப்பவர்கள், வேறேதும் சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது என பார்வையாளர்கள் எண்ணும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்தித்து பிரபலமாகும். பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஐ பொறுத்தவரையில், ஒழுக்கமின்மை மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இது பார்வையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. Bigg Boss Aurora: "அரோரா செய்றது சுத்தமா புடிக்கல" - பிக் பாஸ் அரோராவின் அட்டூழியங்களால் வேதனையில் தோழி ரியா.!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் யார்?

எல்லைமீறிய பேச்சுக்கள், செயல்கள் போன்ற ஒழுக்கமின்மை பிரச்சனையால் கடுப்பான பிக் பாஸ், துஷாரிடம் இருந்த வீட்டு தலைவரின் தலைமை பொறுப்பை பறித்தும் உத்தரவிட்டார். இதன் பின் நடந்த வீட்டுத்தல போட்டியில் கனி வெற்றி பெற்று தற்போது தலைமை பொறுப்பை கையில் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில், எலிமினேஷன் வோட்டிங் லிஸ்டில் கடைசி மூன்று இடத்தில் இருக்கும் அப்சரா, அரோரா, ரம்யா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முன் எலிமினேஷன் இருப்பதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடலாம் என விஜய் சேதுபதி தெரிவித்த ப்ரோமோ இன்று காலை வெளியாகி இருந்தது. இதனால் கடைசி இடத்தில் இருக்கும் அரோரா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அப்சரா வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி விமர்சனங்களை பெற்றுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ப்ரோமோ: