Riya Reacts to Arora’s Behavior (Photo Credit : Instagram)

அக்டோபர் 17, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) முந்தைய சீசன்களை போல பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சி 11வது நாளை கடந்துள்ள நிலையில், பார்வையாளர்களை கவர போட்டியாளர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பலரும் குறிவைத்து, தற்போது அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாகிவிட்டது. இதனால் முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். காதல் கன்டென்ட் கொடுக்கலாம் என நினைப்பவர்கள், வேறேதும் சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது என பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிக்பாஸை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்தித்து பிரபலமாகும். பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஐ பொறுத்தவரையில், ஒழுக்கமின்மை மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இது பார்வையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது.

வீட்டுத்தல பதவியை பறித்த பிக் பாஸ்:

இதனிடையே, போட்டியாளர்களின் செயலால் கடுப்பான பிக் பாஸ், துஷாரிடம் இருந்த வீட்டு தலைவரின் தலைமை பொறுப்பை பறித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் அரோராவின் செயல்பாடுகள் இளைஞர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாக அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், அரோராவின் செயல்பாடுகள் எல்லை மீறி செல்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டுக்குள் இருக்கும் ஆண்கள் பலரிடம் அரோரா தேவைக்காக பழகி கழட்டி விடுவதாகவும், இந்த சர்ச்சையில் சிக்கிய துஷார் தனது அலட்சிய செயல்பாடுகளால் வீட்டின் தலைவர் என்ற பதவியை இழக்க காரணமாக அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவர் பதவியை இழந்ததும் துஷாரை கழட்டிவிட்ட அரோரா கம்ருதீன் பக்கம் தனது பார்வையை திருப்பி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Bigg Boss 9: உச்சகட்ட டென்ஷனில் பிக் பாஸ்.. துஷாரின் பதவியை பறித்து அதிரடி.. அப்செட்டில் வீட்டு தலைவர்.!

பிக் பாஸ் அரோரா குறித்து ரியா கூறியது:

இவ்வாறான பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அரோராவின் செயல்பாடு தனக்கு வேதனை அளிப்பதாக அவரது தோழி ரியா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் அரோரா செய்யும் அனைத்து விஷயங்களையும் நெட்டிசன்கள் வீடியோ தொகுப்பாக சேர்த்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். துஷாரை அழைப்பது, சவாரி செய்வது, கட்டிப்பிடிப்பது, டபுள் மீனிங் வார்த்தை என அனைத்தையும் கவனித்து வருகின்றனர். இதுகுறித்து அரோராவின் தோழி ரியா கூறுகையில், "பிக் பாஸ் வீட்டுக்குள் எனக்கு மனதில் பட்ட செயலை வெளிப்படுத்தி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தான் அவர் சென்றார். அவர் செய்யும் செயல்கள் எனக்கு பயங்கர ஏமாற்றத்தை தந்துள்ளது. எனக்கு அது புரியவும் இல்லை. பிடிக்கவும் இல்லை. என்னடா நடக்குது என்பது போல தான் எனக்கே உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று எனக்கு இருக்கும் கேட்ட பெயரை மாற்ற போகிறேன் என்று தான் சொன்னார்.

அரோரா செய்வது பிடிக்கவில்லை:

நானும் அவருக்கு இதுகுறித்து முன்னதாகவே அறிவுரை கூறினேன். ஆனால் அவர் தான் எனக்கு தோன்றும் விஷயங்களை செய்து உண்மையாக இருப்பேன் என தெரிவித்தார். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒருவேளை அவர் என்னுடன் இருந்திருந்தால் நான் இது சரியில்லை என்று கூறி மாற்றி இருப்பேன். இந்த விஷயம் தொடர்பாக நான் பேச வேண்டும் என மக்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எனது தோழி குறித்து நானே இணையத்தில் தவறாக சொல்ல முடியாது. இது குறித்து அவரை நேரில் சந்திக்கும் போது நான் கட்டாயம் கூறுவேன். கமெண்ட்களில் இது குறித்து கேள்வி கேட்டு என்ன பயன்? நான் பேச வேண்டியது அவரிடம் தான். அதனை அவரிடமே நான் பேசிக் கொள்கிறேன்" என வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 9 அரோரா குறித்து அவரது தோழி வெளியிட்ட வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Nagapriya (@riya_thiyagarajan)