Aghori Kalaiyarasan Eliminated (Photo Credit : Youtube)

நவம்பர் 01, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 23 நாட்கள் கடந்துள்ளன. வீட்டில் இருந்து பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேறினர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். எந்த சீசனாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, காதல், கிசுகிசு தொடர்பான பஞ்சாயத்துகள் இருக்கும். ஆனால், நடப்பு சீசனில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக பல பகீர் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கின்றன. Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!

சுவாரஸ்யமில்லாத பிக் பாஸ் 9:

இந்த வார தலைவராக பிரவீன் இருக்கும் நிலையில், அவர் தனது கேப்டன் பதவியை சரியாக உபயோகிக்கவில்லை என்றே பார்வையாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இரட்டை அர்த்த வார்த்தைகள், எல்லை மீறிய செயல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். பிக் பாஸை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் எப்போதும் டாஸ்க் மற்றும் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் 9-வது சீசனை பொருத்தவரையில் சிலர் மட்டுமே போட்டியில் கவனம் செலுத்துகின்றனர். போட்டியாளர்களாக எதற்கு உள்ளே சென்றனரோ அதையே மறந்து ஒன்றும் புரியாதது போல சிலர் இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கலையரசன் உள்ளிட்ட பலரும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் இருந்ததாக பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வாரம் நடக்கப்போகும் சம்பவம்:

அதே சமயத்தில் பார்வதி, திவாகர், கம்ருதீன், எப்ஜே, வினோத் உள்ளிட்டோர் ஒரு படி மேலே சென்று அமைதியாக இல்லாமல் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பதை வழக்கமாகவும் வைத்துள்ளனர். இதனால் அவர்கள் என்ன பேசி வருகிறார்கள்? என்பது மக்களுக்கும் புரியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களுக்கும் புரியவில்லை. குறிப்பாக திவாகர் இந்த வாரம் தகுதி, தராதரம் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்து பேசி இருந்தார். பிக் பாஸ் சார்பில் சனிக்கிழமையான இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில், விஜய் சேதுபதி மைக் வைத்துக்கொண்டு நான் பேசுவது உங்களுக்கு புரிகிறதா? உங்களுக்கு புரிகிறதா பார்வதி? என கத்தி பேசியுள்ளார். இப்படி கத்திக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் என தெரிகிறதா? என கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் இந்த வாரம் பார்வதி, திவாகர், கம்ருதீன் உள்ளிட்டோரை விஜய் சேதுபதி ரோஸ்ட் செய்து பேசுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பதை ப்ரோமோ உறுதி செய்கிறது.

பிக் பாஸ் 4-வது வாரத்தில் வெளியேறியது யார் (Bigg Boss 4th Week Eviction)?

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உறுதி செய்யும் பொருட்டு கம்ரூதின், திவாகர், வினோத் ஆகியோர் நடந்து கொண்டதாகவும் இணையத்தில் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பிக் பாஸ் தரப்பிலிருந்து இவர்கள் மூவரில் ஒருவருக்காவதுஇந்த நிலையில் பிக் பாஸ் 4-வது வாரத்தில் வெளியேறப்போவது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் இருக்கும் கலையரசன் (Bigg Boss Aghori Kalaiyarasan) வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து இந்த வாரம் வைல்டு கார்டு கண்டஸ்டன்டுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த ப்ரோமோவையும் விஜய் டிவி முன்னதாக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அகோரி கலையரசன் (Agori Kalaiarasan Bigg Boss Tamil):

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் அகோரி கலையரசன். சிறுவயதில் அம்மா, அப்பாவை பிரிந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர், நாட்டுப்புற கலைகளை கற்றுக்கொண்டு மக்களிடம் பிரபலமானார். தொழில் நஷ்டம், விபத்து என அடுத்தடுத்து கஷ்டத்தால் மன நிம்மதிக்காக காசி சென்று பின் கோவிலுக்கு வந்து அருள்வாக்கு சொல்ல தொடங்கியதாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன் அவர் கூறியிருந்தார். மேலும் என்னைப்போல எனது பிள்ளைகளும் அப்பா, அம்மா இல்லாமல் வளரக்கூடாது என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு அகோரி கலையரசன் என்ற பெயரை மாற்றி பிக் பாஸ் கலையரசன் ஆக மாற ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பெயரை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனக்குள் தான் அகோரி இருக்கிறார் என்றும் பிக் பாஸ் இல்லத்தில் வைத்தே தெரிவித்தார். இதனால் அவர் வெளியேறியதாக தகவல் தெரிவிக்கும் நெட்டிசன்கள் பலரும் அகோரி மந்திரம் பலிக்கவில்லை என குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி: