Bigg Boss 9 Tamil Wild Card Contestants (Photo Credit : Youtube)

நவம்பர் 02, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 26 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி உபயோகித்து எப்போதும் டாஸ்க் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை எப்படி ஜெயிப்பது? என்று கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் 9-வது சீசனை பொறுத்தவரையில் சிலர் மட்டுமே போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகின்றனர். மற்ற போட்டியாளர்கள் எதற்காக உள்ளே சென்றனரோ அதையே மறந்து ஒன்றும் புரியாதது போல இருக்கின்றனர். அப்படி இருந்ததால் தான் இதுவரை 4 பேர் வெளியேறினர்.

சுவாரஸ்யமில்லாத பிக் பாஸ் 9:

பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக திவாகர் தகுதி, தராதாரம் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்து பேசியதால், டென்ஷனான விஜய் சேதுபதி தகுதி, தராதாரம் குறித்து பேச நீங்கள் யார் சார்? என்றும் அவரிடம் கேட்டிருந்தார். மேலும் பெண்களின் பாதுகாப்பின்மையை உறுதி செய்யும் பொருட்டு கம்ருதீன், வினோத் திவாகர் ஆகியோர் நடந்து கொண்டதாகவும் இணையத்தில் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பிக் பாஸ் 9 சீசனில் உள்ளே சென்ற போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களும் பிக் பாஸ் பார்ப்பதை தவிர்க்க தொடங்கியதால். அதனை சமாளிக்க வைல்ட் கார்டு போட்டியாளர்களை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப விஜய் டிவி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்து காணலாம். Bigg Boss Tamil 9 Elimination: அகோரி மந்திரம் பலிக்கவில்லையா?.. பிக் பாஸ் 4வது வாரத்தில் வெளியேறிய கலையரசன்?.. கேள்வி எழுப்பும் இணையவாசிகள்.!

1. அமித் பார்கவ் (Bigg Boss Amit Bhargav):

தமிழ் திரையுலகில் மிருதன் படத்தில் நடித்து பிரபலமடைந்த அமித் பார்கவ் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என பலவற்றிலும் தோன்றி பிரபலமடைந்தார். கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை, திருமதி ஹிட்லர் உள்ளிட்ட நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். தனது மனைவியுடன் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டவர் பர்ஃபெக்டாக அதனை முடிப்பதற்கு ஸ்ட்ராட்டஜியும் உபயோகித்து நேர்மையான முறையில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இவர் பிக் பாஸ் வீட்டிற்கும் சென்று நேர்மையான முறையில் விளையாடி வெற்றி பெறுவார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர் மற்றொரு மொழியில் முன்னதாக பிக் பாஸ் வாய்ஸ் கொடுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

2. திவ்யா கணேஷ் (Bigg Boss Divya Ganesh):

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திவ்யா கணேஷ். இவரும் பிக் பாஸ் தமிழ் 9-ல் இன்று வைல்ட் கார்டு கண்டஸ்டன்ட்டாக களமிறங்க இருக்கிறார். இவர் தனது எதிர்கால வாழ்க்கைக்காக நேர்மையுடன் சில விஷயங்களை செய்ததன் காரணமாகவும், ஒளிவு மறைவின்றி பேசியதன் காரணமாகவும் பிக் பாஸ் ரசிகர்களின் பார்வை திவ்யா கணேஷ் மீது திரும்பியுள்ளது.

3. பிரஜின் பத்மநாதன் (Bigg Boss Prajin Padmanabhan):

காதலிக்க நேரமில்லை என்ற நெடுந்தொடரில் நடித்து பிரபலமடைந்தவர் பிரஜின். இவர் திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில், விஜய் டிவியில் சின்ன தம்பி சீரியலிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். மேலும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அங்குள்ளவர்களின் முகத்திரையை கிழிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்ததால், அவரின் என்ட்ரி எதிர்பார்க்கப்படுகிறது.

4. சாண்ட்ரா ஏமி (Bigg Boss Sandra Amy):

தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் சாண்ட்ரா ஏமி. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தனது கணவர் பிரஜினுடன் செல்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து ஏமி கூறுகையில், வீட்டினுள் இருப்பவர்களில் சிலர் கேங் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த கேங்கை நான் உடைத்து விட்டால் அவர்களது ஸ்ட்ராட்டர்ஜி என்ன? என எனக்கு தெரிந்து விடும் என தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் தம்பதியாக சென்று பிக் பாஸ் வீட்டை கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜி - நித்யாவுக்கு பின்னர் தம்பதியாக என்ட்ரி கொடுக்க இருக்கின்றனர்.

போட்டியாளர்களை கலங்க வைத்த தம்பதி: