Bigg Boss Tamil Season 9 Day 11 Promo (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 16, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) முந்தைய சீசன்களை போல பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சி 11வது நாளை கடந்துள்ள நிலையில், பார்வையாளர்களை கவர போட்டியாளர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பலரும் குறிவைத்து, தற்போது அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாகிவிட்டது. இதனால் முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். காதல் கன்டென்ட் கொடுக்கலாம் என நினைப்பவர்கள், வேறேதும் சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது என பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். Diwali Wishes 2025: 'தீபஒளி' பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் - தீபாவளி 2025 வாழ்த்துக்கள்.! 

துஷார் பதவி பறிப்பு:

இந்நிலையில், ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்தித்து பிரபலமாகும். பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஐ பொறுத்தவரையில், ஒழுக்கமின்மை மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இது பார்வையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே, போட்டியாளர்களின் செயலால் கடுப்பான பிக் பாஸ், துஷாரிடம் இருந்த வீட்டு தலைவரின் தலைமை பொறுப்பை பறித்து உத்தரவிட்டார். துஷாரும் பல நேரங்களில் மைக் போடவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. போட்டியாளர்கள் இடையே தூங்குவதில் பிரச்சனை, எப்போதும் தூக்கம் என்ற பிரச்சனை என பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் வீட்டின் தலைமை பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற துஷார், கம்ருதீன் அடுத்த வாரத்துக்கான எவிக்சன் நாமினேஷன் பிரீ பாஸுக்காக மோதுகின்றனர். இருவரில் வெற்றிபெறும் நபருக்கு எவிக்சன் பிரீ பாஸ் கிடைக்கும்.

வீட்டு தலைவர் பதவி பறிபோன வருத்தத்தில் துஷார் (Tushaar Bigg Boss Tamil):

நாமினேஷன் பிரீ பாஸுக்காக மோதிக்கொள்ளும் துஷார் மற்றும் கம்ருதீன்: