ஜூலை 08, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பாரில் நடந்த தகராறு குறித்து விசாரிக்கச்சென்ற போலீசாருக்கு போதைப்பொருள் பயன்பாடு குறித்து துப்பு கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் அதிமுக பிரமுகர், தயாரிப்பாளர் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் தயாரிப்பாளர் பிரசாத் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை கொடுத்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், ஸ்ரீகாந்த் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.
நடிகர்கள் கைது :
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனிடையே ஸ்ரீகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர் கிருஷ்ணாவையும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் கோட்வேர்ட் மூலமாக போதைப்பொருளை கேட்டது உறுதியானதால் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். Kantara Chapter 1: ''காந்தாரா சாப்டர் 1" பர்ஸ்ட் லுக்; ரிஷப் ஷெட்டியின் புதிய அவதாரம்..!
ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் :
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இதனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர். மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.