Jayam Ravi - Aarthi (Photo Credit: @Instagram)

ஜனவரி 18, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி, மிகப்பெரிய அளவிலான பாராட்டுகளுடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயம் ரவி மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நேரடியாக நாடினார்.

நீதிமன்றம் வரை சென்று நீதி கேட்பு:

விவகாரத்தில் விருப்பம் இல்லாத ஆர்த்தி, கணவருடன் சேர்ந்து வாழ்வதாக தெரிவித்தாலும், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதால், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். இருவரில் ஜெயம் ரவி தனது விவகாரத்தில் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் எனவும் மாற்றிக்கொண்டார்.

ஜெயம் ரவி எதிர்ப்பு:

இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஆர்த்தி தனது கணவர் ஜெயம் ரவியிடம் 3 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியுடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் இவர்களுக்கு இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. TV Actor Dies: 23 வயதில் சோகம்... இளம் சீரியல் நடிகர் சாலை விபத்தில் சிக்கி மரணம்... ரசிகர்கள் சோகம்.! 

இன்று விசாரணை:

மனைவியின் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாத ஜெயம் ரவி, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ இயலாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு விசாரணையை பிப்.15, 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றனர்.

நீதிபதி உத்தரவு:

சென்னை மூன்றாவது குடும்ப நலநீதிமன்றம், முதலில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஆலோசனை வழங்கியது. சமரச பேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், மேற்படி அறிக்கை கிடைத்ததும் வழக்கு பின்னர் விசாரிக்கப்படும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டு இருக்கிறார்.