ஜனவரி 18, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வருபவர் அமன் ஜெய்ஷ்வால் (Aman Jaiswal). இவர் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படும் தார்திபுத்ரா நந்தினி (Dhartiputra Nandini) என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே, நேற்று மாலை சுமார் 03:15 மணியளவில் நடிகர் அமன், தனது நண்பர் அபிஷேக் மிஸ்ரா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுகொண்டு இருந்ததாக தெரியவருகிறது. வேறொரு வாய்ப்பு தொடர்பாக அவர்கள் பயணித்த நிலையில், ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் (Jogeshwari Highway) சென்றபோது விபத்து ஏற்பட்டது. Bigg Boss Tamil Season 8: "இதை விட என் வாழ்க்கையில என்ன கிடைச்சிறப்போகுதுனு தெரியலையே பிக் பாஸ்" உருக்கமாக பேசிய முத்துக்குமரன்.!
விபத்து நடந்த 1 மணிநேரத்தில் பறிபோன உயிர்:
இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகர் அமன், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள காமா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட அமன், 1 மணிநேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு சின்னத்திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், இவர்களின் இருசக்கர வாகனத்தை டிரக் ஒன்று மோதியதில் நேர்ந்த விபத்தில் நடந்த சோகம் அம்பலமானது. 23 வயதாகும் இளம் சீரியல் நடிகரின் மறைவு பலரையும் கலங்கவைத்துள்ளது.