ஜூலை 17, புதுவண்ணாரப்பேட்டை (Cinema News): சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 57). இவர் திரைப்பட சண்டைப்பயிற்சி கலைஞர் ஆவார். தற்போது நடிகர் கார்த்திக்கின் சர்தார் 2 படத்தில், சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சார்ந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எல்.வி பிரசாத் லேப் ஸ்டுடியோவில் அவை நடைபெற்றுள்ளன.
சண்டைப்பயிற்சியாளர் பரிதாப பலி:
இந்நிலையில், நேற்று நடந்த சண்டைக் காட்சிகள் படமாக்களின் (Sardar 2 Shooting Accident) போது, ஏழுமலை எந்த விதமான பாதுகாப்பு உபகரணமும் இன்றி 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் மார்பு மற்றும் நுரையீரலில் உள்காயம் அடைந்து பாதிக்கப்பட்டவர், கீழே விழுந்த வேகத்தில் மயங்கினார். அவரை உடனடியாக மீட்ட பணியாளர்கள், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். TN Weather Update: மதியம் 1 மணிவரை 16 மாவட்டங்களில் மழை; அடுத்த 3 நாட்களுக்கு மிககனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
காவல்துறை விசாரணை:
அங்கு ஏழுமலையின் நுரையீரலில் இரத்தக் கசிவும், நெஞ்சு பகுதியில் காயம் இருப்பது உறுதியானது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர், இன்று அதிகாலை 01:30 மணியளவில் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர், ஏழுமலையின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணம் இன்றி 20 அடி உயரத்தில் இருந்து குதித்தே ஏழுமலையின் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்புத்தளத்தில் விபத்தின் போது யார்? யார் இருந்தார்கள் எனவும் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சர்தார் 2:
இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் ரகசிய உளவாளி தொடர்பான கதையை அடிப்படையாக கொண்ட சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்திக், ராஷி கன்னா, லைலா உட்பட பலர் நடிப்பில் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் பட்டப்படிப்பு நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பில் தான் சண்டைப்பயிற்சி கலைஞர் பலியான சோகம் நடந்துள்ளது.