மே 03, சென்னை (Cinema News): அரண்மனை படத்தின் 4ம் பாகம் இன்று (மே 03) திரையரங்குகளில் வெளியாகிறது. அரண்மனை படத்தின் 3 (Aranmanai Movie Series) பாகங்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இப்படம் 4ம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அரண்மனை 4 (Aranmanai 4) படத்தில் நடிகர்கள் சுந்தர் சி (Sundar C), ராசி கண்ணா, தமன்னா (Tammannah), விடிவி கணேஷ் (VTV Ganesh), யோகிபாபு (Yogi Babu), கோவை சரளா (Kovai Sarala), சேசு உட்பட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா இசை - சுந்தர் சி இயக்கம் வெற்றிக்கூட்டணி: தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கம் முதலாகவே நல்ல படங்கள், பொழுதுபோக்கு படங்கள் என்ற விசயத்திற்கு திடீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகும் படத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் இன்று வெளியாகிறது. ஹிப்ஹாப் தமிழா இசையில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் பப்ளிக் ஷோவில் மக்களுடன் மக்களாக படம் பார்த்து ரசித்த நடிகர் & இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Heatwave in Asian Countries: வெப்ப அலையால் தவிக்கும் ஆசியா.. அனலால் வெந்து தவிக்கும் நாடுகள்..! 

மகிழ்ச்சியுடன் செய்தியாளர்கள் சந்திப்பு: இதுதொடர்பாக அவர்கள் சுந்தர் சி பேட்டியில், "இன்று எனது ஒன்றரை வருட உழைப்பான அரண்மனை 4 முதல் மக்கள் காட்சி திரையிடப்பட்டது. பயத்துடன் நான் அவர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கூறினார்கள். பக் பக் மனநிலையுடன் படம் இருக்கும். திரையரங்கில் ரசிகர்களும் அதனை வரவேற்று வெற்றியை வழங்குவார்கள் என நம்புகிறேன். தெய்வங்களாகிய ரசிகர்கள் எங்களை வாழவைத்துள்ளனர். அரண்மனை 4 வெற்றியின் மூலமாக மேலும்மேலும் எங்களுக்கு வாழ்த்துக்களை கொடுப்பார்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை.

நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பூ: எனது முகத்தில் உள்ள சந்தோசம் அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கும். நேர்மறையான கருத்து இருக்கும் என்பது தெரிந்தாலும், இவ்வுளவு தூரம் மக்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுந்தர் எப்போதும் குடும்ப பொழுதுபோக்கு படம் எடுப்பார். மீண்டும் அதனை செய்துள்ளார். அவர் கூறியதுபோல எங்களை இவ்வுளவு ஆண்டுகளாக வாழவைத்த அனைவர்க்கும் நன்றி" என கூறினார்.

படம் எப்படி சுருக்கமாக? அரண்மனை 4 படத்திற்கு சுந்தர் சியின் இயக்கம், ஆதியின் இசை, தமன்னாவின் நடிப்பு, விடிவி கணேஷ், யோகிபாபு, கோவை சரளா ஆகியோரின் காமெடி, குஷ்பூ மற்றும் சிம்ரனின் சாமி பாடல், சிஜி தொழில்நுட்பம் ஆகியவை பெரும் பலமாக அமைந்துள்ளது என பப்ளிக் மற்றும் பிரஸ் ஷோவில் படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர். நீங்களும் உங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் சென்று குடும்பத்துடன் படத்தை கண்டுகளிக்கலாம்.

இயக்குனர் சுந்தர் சி - ஹிப் ஹாப் தமிழா இணைந்து பணியாற்றிய ஆம்பள, அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்கள் நல்ல வெற்றியையும், அதில் உள்ள பாடல்கள் வரவேற்பையும் பெற்றுள்ளன. அந்த வகையில் அரண்மனை 4 படமும், அதில் உள்ள பாடல்களும் நல்ல வெற்றியை அடைந்து, தற்போது படத்தின் இசையும் பாராட்டுகளை பெற்றுள்ளது.