ஏப்ரல் 05, சென்னை (Cinema News): பாஃப்டா (BAFTA) விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜானின் சென்னை ஸ்டோரி சர்வதேச படத்தில் சமந்தா (Samantha) ஹீரோயினாக நடிக்க இருந்தது. அப்போது திடீரென சமந்தாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை (Shruti Haasan) ஒப்பந்தம் செய்தார்கள். இதில் அவர் அனு என்கிற டிடெக்டிவ்வாக நடிக்கிறார். இந்த படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, ஜான் ரெனோ, சாம் வொர்திங்டன், கெவின் ஹார்ட் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். Voting Awareness: தேர்தல் எதிரொலி... 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் ஸ்ருதி இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.