ஏப்ரல் 19, உத்தரகாண்ட் (Uttarakhand): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. World Liver Day 2024: இன்று உலக கல்லீரல் தினம்.. கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?.!
தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் மௌரி கர்வாளில் (Pauri Garhwal) உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு வந்து பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். தற்போது இந்த சம்பவமானது இணையம் முழுதும் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த தம்பதிகளை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.