ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Actor Karthi Casted Vote: “அனைவரும் வாக்களிக்க வேண்டும்.." ஜனநாயக கடமையாற்ற மக்களை அழைத்த நடிகர் கார்த்திக்..!

தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் (Actor Vishal) சென்னையில் தனது வாக்கை செலுத்தினார். நடிகர் விஷால் ஓட்டு போடுவதற்காக நடிகர் விஜய் ஸ்டைலில் சைக்கிளில் வந்தார். நடிகர் விஜய் கடந்த தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.