ஜூலை 14, சென்னை (Cinema News): விஷால், அபிமன்யா, ரித்து வர்மா, எஸ்.ஜே சூர்யா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், ஒய்.ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி (Mark Antony).
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.
இசை சேகரிப்பு பணிகளை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், படத்தின் முதல் பாடல் சிங்கிள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. தமிழ் மொழியில் இன்று வரை நடிகராகவே பரிச்சயப்பட்ட நடிகர் விஷால், மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக தனது குரலில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
அதிரதா என்ற பாடலை தெலுங்கு மொழியில் அவர் பாடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அப்பாடல் வெளியாகவுள்ளது.
Enna Lyrics ba ithu… Adaratha ok.. appuram ennenavo varuthu.🙄#MarkAntony
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 13, 2023