செப்டம்பர் 04, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்த தகவல், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி அன்று வெளியாகி பெரும் அதிர்வலையை உண்டாக்கி இருந்தது. பெண்களை அடஜஸ்ட்மென்ட் என்ற பெயரில், தங்களின் ஆசைக்கு இணங்கும் நபர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்கியதும், ஆசைக்கு இணங்காத பெண்களுக்கான படவாய்ப்புகளை தவிர்த்தும் அம்பலமானது. மேலும், பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இயக்குனர், நடிகர்கள் மீது புகார்:
இதனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து மலையாள திரைப்பட இயக்குனர்கள், நடிகர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மலையாள நடிகர்கள் ஜெய சூர்யா, சித்திக், பாபுராஜ், இடவெல பாபு, இயக்குனர்கள் ரஞ்சித், துளசிதாஸ் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் தங்களின் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, தாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். Coolie Rajini Character Name Revealed: சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஸ்டைலிஷ் அவதாரம்.. கூலி நம்பர் 1421ன் பெயர் தெரியுமா?!
பிரேமம் புகழ் நிவின் பாலி மீது வழக்கு:
இதனிடையே, எர்ணாகுளம் காவல் நிலையத்தில், நேற்று பெண்மணி ஒருவர் ப்ரேமம் திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்தார். துபாயில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் ஏகே சுனில், பினு, பஷீர், குட்டன், நிவின் பாலி ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் நிவின் பாலியின் பெயர் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த மலையாள திரைஉலகும் பரபரப்பில் இருக்கிறது.
பொய்யான குற்றச்சாட்டு என நடிகர் விளக்கம்:
மேலும், தன் மீதான புகார் குறித்து தகவல் அறிந்த நிவின் பாலி, நேற்றே செய்தியாளர்களை சந்தித்து புகாருக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், புகார் அளித்த பெண்ணை யார் என்றே தனக்கு தெரியாது எனவும் கூறினார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளக்கம் அளித்துள்ள நடிகர் நிவின் பாலி, சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள்வதாகவும், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் நிவின் பாலி எக்ஸ் பதிவு :
View this post on Instagram