Hope on the Street (Photo Credit: @borakore52 X)

மார்ச் 26, தென் கொரியா (Cinema News): தென்காரிய நாட்டை சேர்ந்த கே பாப் பாடகர் குழுவான பிடிஎஸ் (BTS) தனக்கென்று உலகம் முழுவதும் ஒரு ஆர்மியை வைத்துள்ளது. அவர்களின் பாடலைக் கேட்க பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியது.

ராணுவ பயிற்சியை முன்னிட்டு BTS உறுப்பினர்கள் முன்னதாகவே தங்களது சோலோ பாடல்கள், ஆல்பத்திற்கான பணிகளை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஜங்கூக்கின் ‘கோல்டன்’ ஆல்பம், V-ன் டிஜிட்டல் சிங்கிள் ‘FRI(END)S’ உள்ளிட்டவை முன்னதாகவே தயார் செய்யப்பட்டு, அவர்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வெளியானது. இந்நிலையில் நாளை மறுநாள் BTS உறுப்பினர் ஜே-ஹோப்பின் ஆவணத் தொடரான ‘Hope on the Street’ வெளியாக உள்ளது. 6 எபிசோட்டுகள் இந்த ஆவணத் தொடர் ‘பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆவணத் தொடரில் ஜே-ஹோப், BTS-ல் சேர்வதற்கு முன்னர் தெருக்களில் நடனமாடும் ‘ஸ்ட்ரீட் டேன்சர்’ ஆக இருந்தது குறித்த பகுதிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. Boy Kidnapped And Killed For ₹ 23 Lakh: 23 லட்சத்திற்காக சிறுவன் கடத்திக் கொலை.. மும்பையில் பரபரப்பு..!

மேலுக்கும் தற்போது ராணுவ பணியில் இணைந்துள்ள இவர்கள் ஏழு பேரும் மீண்டும் எப்போது யூடியூப் வருவார்கள் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மீண்டும் 2025 ஆம் ஆண்டு தங்களது ராணுவ பணிகளை முடித்துவிட்டு, பாடும் பணியை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.