Vetrivel Cinemas, Nanganallur (Photo Credit: @Sunnewstamil X).

செப்டம்பர் 19, நங்கநல்லூர் (Chennai News): சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் திரையரங்குகளில், எப்போதும் மக்கள் கூட்டம் என்பது பெரும்பாலும் அலைமோதிய வண்ணமே இருக்கும். அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும் ஏசி உட்பட நவீனமயமாக்கப்பட்டுள்ள காரணத்தால், வார இறுதிகளிலிலும், புதிய படங்களின் வருகைக்கு பின்னரும் மக்கள் வெள்ளத்தால் திரையரங்குகள் திருவிழா கூட்டம் போல அலைமோதும்.

நங்கநல்லூர் வெற்றி (Vetrivel Cinemas) திரையரங்கம்:

ஒவ்வொரு திரைப்படத்தை கொண்டாடும் மையமாக திரையரங்குகள் இருந்தாலும், அவர்களின் பார்க்கிங் கட்டணம், சிற்றுண்டிகள் விலை, டிக்கெட் விலை போன்றவை தொடர்ந்து விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை நங்கநல்லூர் (Nanganallur) பகுதியில் அமைத்துள்ளது வெற்றிவேல் திரையரங்கம். இங்கு வெற்றி, வேலன் என 2 திரைகளில், நாளொன்றுக்கு 8 காட்சிகள் திரையிடப்படும். சமீபத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான தி கோட் (The GOAT) திரைப்படம் இங்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ரூ.60 இலட்சம் வரி பாக்கி:

இதனிடையே, கடந்த 2015ம் ஆண்டுக்கு பின் வெற்றி திரையரங்கம், சென்னை மாநகராட்சிகள் சொத்து உட்பட எந்த வரியையும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திரையரங்கம், மொத்தமாக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.60 இலட்சம் அளவில் வரி பாக்கி வைத்துள்ளது. இதனால் இன்று காலை திரையரங்குக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், அதிரடியாக திரையரங்கின் மின்சாரத்தை துண்டித்தனர்.

காட்சிகள் ரத்து, முன்பதிவு இணையப்பக்கம் முடக்கம்:

மேலும், பணிக்கு வந்திருந்த திரையரங்கு பணியாளர்களை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அரங்குக்கு சீல் வைத்தனர். இதற்கு மேல் திரையரங்கின் இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாத வகையில், முன்பதிவு மையமும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து முன்பதிவு செய்த ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து குவிவார்கள் என்பதால், காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.