Earthquake (Photo Credit: @Inkhabar X)

ஜனவரி 11, ஆப்கானிஸ்தான் (Afghanistan): ஆப்கானிஸ்தானில் தற்போது திடீரென மிகப் பெரிய நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வனது பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரை எதிரொலித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மற்றும் இஸ்லாமாத் நகரங்களில் இந்த நில அதிர்வு மிக அருகில் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைக்கு ஓடி வந்துள்ளனர். Mark Zuckerberg's New Business: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.. புதிய பிசினஸ் தொடக்கம்..!

அதேபோல் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரம் கடுமையான நிலநடுக்கத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தானில், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதனை பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.