Teenz 2024 Tamil Movie Poster (Photo Credit: Facebook)

ஜூலை 08, சென்னை (Cinema News): அகிரா புரொடக்சன்ஸ், பயாஸ்கோப் ட்ரீம்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டீன்ஸ் (Teenz). டி. இமான் இசையில், திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், 13 நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து கதையமைக்கப்பட்டுள்ளது. பார்த்தீபனுக்கே உரித்தான தனித்துவத்துடன் உருவாகியுள்ள டீன்ஸ் திரைப்படம், 12 ஜூலை 2024 அன்று திரையரங்குகளில் உலகளவில் வெளியாகிறது. பல உன்னதமான படைப்புக்களை திரைத்துறைக்கு வழங்கி, திரை ரசிகர்களை இருக்கையுடன் கட்டிப்போடும் தன்மை கொண்ட பார்த்தீபன், தற்போது தனது புதிய படைப்பை வாங்கி இருக்கிறார். Vidaamuyarchi Second Look: முயற்சிகள் தோற்பதில்லை.. தல அஜித்தின் விடாமுயற்சி செகண்ட் லுக் வெளியீடு..! 

டிக்கெட் விலை ரூ.100 மட்டுமே:

இந்த படைப்பை திரையரங்கில் வந்து பலரும் பார்த்துச்செல்ல எதுவாக, முதல் 10 நாட்களுக்குள் திரைக்கு வந்து படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம் வசூல் செய்யும் வகையில் தனது பங்கையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை பார்த்தீபன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எனது படத்திற்கு நானே வரிவிலக்கு அளிக்கிறேன். எதற்காகவும் என்னை நான் குறைத்துக்கொண்டதே இல்லை. ஆனால், டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.100/- மட்டுமே. இதில் நாட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதேன் நாட்டமே!" என கூறியுள்ளார்.

ஒவ்வொரு ரசிகரையும் கவர புதிய நுட்பம்:

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கில் குறைந்தபட்ச கட்டணம் என்பது ரூ.100 முதல் ரூ.150 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஏசி, மல்டிப்ளக்ஸ் என பல விதங்கள் இருக்கின்றன. முதல் சில நாட்களுக்கு அதிக தொகை இருப்பதால், பலரும் 2 அல்லது மூன்றாவது வாரம் தான் திரையரங்கு பக்கமே செல்வார்கள். அவ்வாறான திரை ரசிகர்களையும் கவர பார்த்தீபன் தனது திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் நடிகர் & இயக்குனர் பார்த்தீபன், டீன்ஸ் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கும் பணியை ஏற்றுக்கொண்டு இருந்த கோவையை சேர்ந்த பிரபல நிறுவனம் மீது மோசடி புகார் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.