ஏப்ரல் 11, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பானது துபாயில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று ரமலான் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய் கோட் (GOAT) படத்தின் அடுத்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Importance of Voting: நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.. அதற்கு தேவை மக்களின் ஒட்டு..!

இப்படி சினிமா, கட்சி என அடுத்தடுத்து பிசியாக இருக்கும் விஜய் சமீபத்தில் தனது தாய்க்காக சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.