ஆகஸ்ட் 21, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்துள்ளார். இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார். தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தொடர்ந்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று கட்சி தொடங்கினார். மேலும் செப்டம்பர் இறுதி வாரத்தில் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். Sanam Shetty About Casting Couch: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் படவாய்ப்பு கிடைக்கும்" - சனம் ஷெட்டி ஆவேசம்..!
கட்சியின் கொடி: தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை விஜய் தனது கட்சி கொடியை (TVK Flag) அறிமுகப்படுத்துகிறார். இந்த கொடி அறிமுகம் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நிகழ்ச்சியில் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு ஒத்திகை பார்க்க நடிகர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.