FIR Against TVK Vijay After Youth Thrown by Bouncers (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 27, பெரம்பலூர் (Perambalur News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். தன்னுடன் வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் உட்பட பல்வேறு அறிவிப்புகளுடன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக தலைவராக அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அரசியல் பயணத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டதாக கூறப்படும் நிலையில், விஜய் மேடையில் ராம்ப் வாக் செய்து இருந்தார்.

ரசிகர்களை தூக்கி கீழே விட்ட பவுன்சர்கள் :

அப்போது ரசிகர் ஒருவர் ஆர்வத்தில் விஜய் அருகே செல்ல முற்பட்ட நிலையில், விஜய்க்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள் அவரை அப்படியே தூக்கி கீழே விட்டனர். இதை கண்டு உடனடியாக விஜய் அந்த இளைஞரை விடுமாறும், பௌன்சர்களை பின்னே தள்ளி செல்லுமாறும் அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்களிடையே ரசிகரை காப்பாற்றியதாக பாராட்டுகளை பெற்றாலும், மறுபக்கம் பவுன்சர்கள் மீதும் விஜயின் மீதும் எதிர்ப்பு குரல் எழுந்தது. வானிலை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.! 

பெரம்பலூர் இளைஞர் புகார் :

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் தனது தாயுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வேலை பவுன்சர்கள் தூக்கி வீசியதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். எங்களுக்கு இழப்பீடு வேண்டும் என அவரது தாய் ஆதங்கத்துடன் தெரிவித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் தற்போது மதுரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகாரில் தவெக தலைவர் விஜய்யின் பெயர் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாய்ந்து ஓடிய இளைஞரை தூக்கி வீசிய பவுன்சர்கள் :