Nitin Chandrakant Desai Memorized by Oscar Academy 2024 (Photo Credit: @LatestLY X)

மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, ஹாலிவுட் டால்பி திரையரங்கில் வைத்து பிரம்மாண்டமாக இன்று ஆஸ்கர் (96th Oscar Awards 2024) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 05:00 மணியளவில் தொடங்கி நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் திறம்பட தங்களின் படைப்புகளை தயாரித்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன், சிறந்த நடிகருக்கான விருதை சில்லியன் மர்பி, சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் ஆகியோர் பெற்றனர். சிறந்த படத்திற்கான விருது ஓப்பன்ஹைமர்-க்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதை தெரிந்துகொள்ள இங்கு அழுத்தவும்: 96th Oscars: கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், சல்லியன்... ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.! 

நிதின் சந்திரகாந்த் தேசாய்க்கு அங்கீகாரம்: இந்த நிகழ்வின்போது மறைந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மேத்யூ பெரி, மைக்கேல் காம்பன் ஆகியோர் நினைவு கூறப்பட்டார். இவர்களுடன் இந்திய கலை இயக்குனர் நிதின் சந்திரகாந்த் தேசாயும் (Nitin Chandrakant Desai) நினைவு கூறப்பட்டார். மறைந்த நிதின் தேசாய், 1987ம் ஆண்டு முதல் திரையுலகில் பணியாற்றி வந்தார். ஜோதா அக்பர், அஜிந்தா, ஹரிச்சந்திராச்சி பேக்டரி, ஹம் தில் தே சுகே சனம், லகான், தேவதாஸ், பாலகந்தர்வா ஆகிய படங்களில் கலை இயக்குனராக உலகளாவிய வரவேற்பையும் பெற்றார்.

கடந்த 2 ஆகஸ்ட் 2023 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கர்ஜித்தில் இருக்கும் தனது இல்லத்தில், 57 வயதில் அவர் இயற்கை எய்தினார். இந்திய அளவில் 4 முறை தேசிய விருதுகள், 3 பிலிம்பேர் விருதுகள் பெற்று இருக்கிறார். ஹெலோ ஜெய் ஹிந்த், அஜிந்தா ஆகிய படங்களை இயக்கியும், ராஜா சிவசத்ரபதி, டிரக்பார் ஸ்வப்னா ஆகிய படங்களை தயாரித்தும் வழங்கியுள்ளார்.