ஜனவரி 30, சென்னை (Chennai): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. Woman Climbed The Building Of Government Hospital: அரசு மருத்துவமனையில் பதற்றம்.. மொட்டை மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்மணி..!
சைரன்: இந்நிலையில் ஜெயம் ரவிக்கு புதிய படம் ரிலீஸ் ஆக உள்ளது. அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் எழுதி இயக்கும் சைரன் (Siren) என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (G. V. Prakash Kumar) இசையமைத்துள்ளார். தற்போது இந்த படமானது பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே தனது அதிரடி நடிப்பை இரு வேடங்களில் ஜெயம் ரவி வெளியிட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இப்படத்தின் மூலம் அவர் கண்டிப்பாக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சைரன் படத்தின் முதல் பாடல்: இந்நிலையில், 'சைரன்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இதில் ஜெயம் ரவி இளமையான தோற்றத்தில், தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் அனுபமாவும் ஜோடியாக கச்சிதமாக நடித்துள்ளார். இப்பாடலானது தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.